Categories
உலக செய்திகள்

சிக்கி தவிக்கும் பொதுமக்கள்…. இரவு நேர ஊரடங்கு அமல்…. ஆப்கான் அரசின் தீவிர நடவடிக்கை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளதால் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கொன்று வருகின்றனர். இதுவரை மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஆண் மற்றும் பெண் பத்திரிக்கையாளர்கள், மனித ஆர்வலர்கள் போன்ற 33 பேரை கொன்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து அமெரிக்கப் படைகள் இருந்த தைரியத்தில் தாலிபான்களை எதிர்த்தவர்களை தேடி வருவதால் அவர்கள் குடும்பத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் தாலிபான்களின் தாக்குதல் அதிகமாகியுள்ளது. அதனை ஆப்கான் அரசு கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கானது ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 31 மாகாணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |