ஆப்கானிஸ்தான் நாட்டினை தாலிபான்களின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக கொண்டுவரப் போவதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க நேசோட்டு படைகள் வெளியேறுகின்றனர். மேலும் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து படைகளும் வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தாலிபான்கள் நாட்டை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள 400 மாவட்டங்களில் 200 தாலிபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், ஈரான், கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளுடனான எல்லையை பகிர்ந்துள்ளது. எனவே அந்த நாடுகளில் உள்ள எல்லைகளையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தாலிபான்கள் 90% எல்லை பகுதிகளை கைப்பற்றி விட்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் முஜாகித் தெரிவித்துள்ளார். மேலும் “ஆப்கானிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த எல்லைகளையும் நாங்கள் வெகு விரைவாக கைவசப்படுத்தி விடுவோம். பிறகு நாடானது எங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். அதேசமயத்தில் நாட்டிற்குள் அன்னிய நாட்டு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட அனுமதிக்க மாட்டோம் அதிலும் குறிப்பாக ஐஎஸ் அமைப்புக்கு இடமளிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.