ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் இருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அந்த இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்துஅமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த போரினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தோஹாவில் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுண்ட்சாதா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “இந்த தாக்குதலில் நாங்கள் முன்னேறி வந்தபோதிலும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று இஸ்லாமிய எமிரேட் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவதாக நாங்கள் உறுதி எடுத்துள்ளோம். நம்மிடம் உள்ள பிரச்சனைகளை நாமே கலந்து பேசி தீர்த்து கொள்வது நமது நாட்டை நெருக்கடியிலிருந்து காக்கும் மேலும் வெளிநாட்டினரின் மீது நம்பகத்தன்மையில்லை” என தெரிவித்துள்ளார்.