Categories
உலக செய்திகள்

மாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆகப் பதிவு…. பீதியடைந்துள்ள மக்கள்….!!

மாலையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் வடமேற்கில் 202 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று மாலை 4.09 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியில்  இருந்து 150 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது.

இது குறித்தான தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் பற்றிய எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |