Categories
உலக செய்திகள்

நாங்களா இதுக்கு காரணம்…. கருத்து வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அதிபர்…. கண்டனம் தெரிவித்த பிரபல நாடு…!!

ஆப்கானிஸ்தானின் அதிபர் தங்கள் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறுவதை அடுத்து அந்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு மோசமான நிலைமை தொடர்வதாகவும் இதற்கு ஒரு வகையில் பாகிஸ்தானும் காரணம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சமாதான முன்னெடுப்பில் பாகிஸ்தான் எதிரான பங்களிப்பை கொண்டுள்ளதாகவும்  அஷ்ரப் கனி குற்றம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அஷ்ரப் கனியின் பேச்சுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தாக்குதல்களுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது பாகிஸ்தான் தான். மேலும்  கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் 70,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தற்போதைய நிலைக்கு பாகிஸ்தானை குறை கூறுவது நியாயம் இல்லை என்றும்  பாகிஸ்தான் ஒருபோதும் வன்முறையை விரும்பவில்லை” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |