Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சிக்கி தவிக்கும் நாடு…. உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட ஜோ பைடன்….!!

ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில்  65% நிலப்பரப்பை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்று மாலை ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள பாக்லான்  மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை கைப்பற்றியுள்ளனர். இதற்காக தலீபான்களின் கோட்டையான லேகின் பாலைவனத்தில் ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை தலீபான்கள் 7 தலைநகர்களை ஒரே வாரங்களில் கைவசப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஆப்கான் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். ஆப்கான் படைகளின் எண்ணிக்கையானது தலீபான்களை விட அதிகம். ஆகவே ராணுவ வீரர்கள் அவர்களுக்காகவும் அவர்களின் நாட்டுக்காகவும் தொடர்ந்து போரிட வேண்டும்.

அதிலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகளை வெளியேற்றுவது எந்தவித வருத்தத்தையும் தரவில்லை. மேலும் 20 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர்களை செலவு செய்தும் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளோம். இருப்பினும் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான விமானம், உணவு, ராணுவ வீரர்களின் ஊதியம் ஆகியவற்றை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும்” என்று கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் மக்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க முன் வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |