Categories
உலக செய்திகள்

பயத்தில் உள்ள ஆப்கானியர்…. 1௦ ஆண்டுக்கால கோரிக்கை…. ஏற்றுக்கொள்ளாத பிரித்தானியா அரசு….!!

சஜித் என்பவரின் 1௦ ஆண்டுக்கால வசிப்பிடக் கோரிக்கையை  பிரித்தானியா அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளியில் சஜித் என்ற சிறுவன் படித்து வந்துள்ளான். இதனையடுத்து அவனது பள்ளிக்கு வந்த தலீபான்கள் புத்திக் கூர்மையான மாணவர்கள் குழு ஒன்றை தங்களின் பயிற்சிக்காக கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். மேலும் அந்த மாணவர்களின் உயர் கல்விக்கான அனைத்து செலவுகளையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே அவர்களின் உண்மையான முகம் வெளிவந்ததுள்ளது. அந்தக் கூட்டத்தில் 13 வயதான சஜித் உட்பட அனைவரையும் மனித வெடிகுண்டுகளாக மாறுவதற்கு தலீபான்கள் பயிற்சி அளித்துள்ளனர். ஒருவேளை இந்த பயிற்சியில் இருந்து தப்பிக்க முயலும் நபர்களின் குடும்பத்தாரை கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

ஆனால் இந்த மிரட்டலுக்கு பயப்படாத சஜித் அவர்களிடமிருந்து தப்பித்து 14 வயதிலேயே பிரித்தானியாவுக்கு சட்ட விதிமுறைகளை மீறி தஞ்சமடைந்துள்ளான். இதனை தொடர்ந்து அங்கிருக்கும் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் தனது பெற்றோரையும் தேடி வந்துள்ளான். ஆனால் அவர்கள் கிடைக்கவே இல்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகள் கழித்தும் வசிப்பிட கோரிக்கைக்கு  பிரித்தானியா அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தாம் மீண்டும் தலீபான்களின் கையில் ஒப்படைக்கப்படலாம் என்று சஜித் கூறியுள்ளான். அதிலும் ஆப்கானில் அவருக்கு குடும்பத்தாரோ அல்லது உறவு என்று சொல்லிக் கொள்வதற்கோ எவருமில்லை என்று கூறியுள்ளார்.

தற்போழுது தெற்கு லண்டனில் வசித்து வரும் சஜித் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் 10 ஆண்டுக்கால வசிப்பிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத பிரித்தானியா அரசு எப்போது வேண்டுமானாலும் தன்னை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிவிடலாம். அங்கு சென்ற பிறகு தலீபான்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று சஜித் அச்சத்தில் உள்ளார். இதே போன்று ஒருவரின் 2௦ ஆண்டுகளாக வசிப்பிடக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத பிரித்தானியா அரசு அவரை ஆப்கானுக்கு திருப்பி அனுப்பியது. அங்கு அவரை தலீபான்கள் தேடிச் சென்று கொன்ற சம்பவத்தை சஜித் கேள்விப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |