ஆப்கானுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜே. பி. சிங் பங்கேற்றுள்ளார். இவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கான சிறப்பு பிரதிநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இஸ்லாமிய அமீரக தலீபான் தூதுக்குழுவின் துணைப் பிரதமரான மவுல்வி அப்துல் சலாம் ஹனபி தலைமையில் உயர்மட்ட குழு அவரை சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என்று இந்தியா வாக்களித்துள்ளது. இதனை தலீபான்களின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கூறப்பட்டதில் “ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
தற்போது ஆப்கான் மிகவும் கடினமான சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என இந்திய தூதர் ஜே. பி. சிங் கூறினார். குறிப்பாக இரு தரப்பினரும் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த விரும்புகின்றோம். இறுதியாக பேச்சுவார்த்தையில் ஆப்கானுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.