Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

செப்- முதல்….. “10% கட்டண உயர்வு” ஏர்டெல்…. வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனுடன் போட்டிபோடும் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அள்ளித் தந்தாலும், ஜியோவின்  உச்சத்தை இவர்களால் தொட முடியவில்லை. இருப்பினும்,

ஏர்டெல் நிறுவனம் பின்வாங்காமல் தனது அத்தனை உழைப்பையும் போட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், இரு நிறுவனங்களும்  ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி டேட்டா மற்றும் கால் அழைப்பு கட்டணத்தின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்தப்போவதாகவும், இந்த விலை ஏற்றம் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. 

Categories

Tech |