இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள கல்லூரி ஒன்றில் வைத்து சுமார் 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இம்பீரியல் என்னும் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து விஞ்ஞானிகள் சுமார் 1,00,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.
அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது பொதுமக்கள் கொரோனாக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட 3 மாதங்களுக்குப் பின்பும் கூட கொரோனாவின் வேகம் அதிகமாக உள்ளது என்பதாகும்.
ஆகையினால் கொரோனா தொற்றுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுக்கொண்டவர்கள் அதனுடைய பூஸ்டர் டோஸ்ஸையும் செலுத்திக் கொள்ளுமாறு அறிவியலாளர்கள் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.