இந்தோனேஷியாவில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்திய குகையிலிருந்து சுமார் 45,500 வருடங்கள் பழமையான மான் மற்றும் பன்றியின் ஓவியங்களை கண்டறிந்துள்ளார்கள்.
இந்தோனேசியாவில் சுலவேசி என்னும் தீவு அமைந்துள்ளது. இந்தத் தீவிலுள்ள குகை ஒன்றில் இந்தோனேஷிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குகையில் வரையப்பட்டிருந்த சுமார் 45,500 வருடங்கள் மிகவும் பழமையான மான் மற்றும் பன்றியின் ஓவியங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.