Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

நீதிமன்ற உத்தரவின் படி அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றிவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி சாலையின் இருபுறங்களிலும் சிலர் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஹோட்டல் மற்றும் டீ கடைகளை கட்டியுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் மற்றும் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டனர்.

Categories

Tech |