ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி உத்தரவின் படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பிரதான சாலை மற்றும் திருவள்ளுவர் சாலை ஓரங்களில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர்.
இதனை தொடர்ந்து காந்தி பஜார் பகுதி முழுவதும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் இருந்த கட்டிடங்கள், மேற்கூரைகள் போன்றவற்றை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.