ஆலங்கட்டி மழையினால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் தனுன்டா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அதிலும் வெள்ளமானது சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடி ஒரு கடைக்குள் புகுந்துள்ளது. இந்தக் காட்சியானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://youtu.be/F3sclv_as8k
மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த திராட்சை பழங்கள் வெள்ளத்தில் சேதமடைந்து நீரில் மூழ்கியதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அடிலெய்டில் ஆலங்கட்டி மழையினால் கார் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.