மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் மர்ம நபர்கள் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உள்ளே சென்று சோதனை நடத்திய போது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. 100 லிட்டர் சாராயம் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கீழே கொட்டி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கீலங்காட்டு கிராமத்தைச் சேர்ந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.