நடிகர் அஜித் வலிமை படக்குழுவுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . திரையுலக பிரபலங்கள் தங்கள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் நடிகர் அஜீத் இந்த புத்தாண்டை வலிமை படக்குழுவுடன் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டு கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் நடன கலைஞர் மைக்கேல் ,’2021 ஆம் ஆண்டு என் வாழ்வில் இப்படி ஒரு புத்தாண்டு தினத்தை கொண்டாடுவேன் என எதிர்பார்க்கவில்லை .
தல அஜித் பக்கத்தில் நின்று சரியாக 12 மணிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன் . இதையடுத்து ஆலுமா டோலுமா பாடலுக்கு தல அஜித்துடன் சேர்ந்து நடனம் ஆடியது மறக்க முடியாது. அது எனக்கு வேற லெவல் உணர்வாக இருந்தது . இப்படி ஒரு புத்தாண்டு என் வாழ்க்கையில் வந்ததில்லை . கடவுளிடம் இதற்காக நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.