ஆப்கானிஸ்தானில் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்காக பெண்கள் ஆளுநர் வளாகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் ஹெராட் மாகாண ஆளுநர் வளாகம் முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முழக்கமிட்டனர் மேலும் கல்வி, வேலை போன்ற பெண்களின் முக்கிய உரிமைகளுக்காவும் போராடினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் கூறியதில் “வீட்டில் பெண்கள் அடிமையாய் வாழ்வதை விட மரணத்தை தழுவுவது மேல்” என்று கூறியுள்ளார்.
https://twitter.com/i/status/1433336410694721536
அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் பெண்கள் படைத்த சாதனைகள் மற்றும் உரிமைகளை இழந்து விடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பெண்களின் சுதந்திரம் குறித்து அனைவரிடமும் கவலை எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து தலீபான்கள் கூறிய போது “நாங்கள் மாறிவிட்டோம். மேலும் ஷரியத் சட்டத்தின் மூலம் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரமும் வழங்கப்படும். ஆப்கானில் நிலைமை மாறியதும் பெண்கள் பணிக்கு திரும்பலாம்” என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.