Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஊழலை ஒழிப்பதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழலை ஒழித்து மாநிலத்தை முன்னோக்கி அழைத்து செல்வதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. காலதாமதமாக சென்ற காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனுது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் கட்சியின் ஒரே நோக்கம் ஊழலை ஒழித்து மாநிலத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதுதான். மற்ற கட்சிகள் என்னை வீழ்த்த முயற்சி செய்துவருகின்றன.

பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத், ஜனநாயக் ஜனதா கட்சி, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு பக்கத்தில் உள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள், தண்ணீர், மின்சாரம், பெண்களுக்கான இலவச பயணத்திட்டம், பொது மக்கள் உள்ளிட்டவை மற்றொரு பக்கம் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.

புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து யுவ மோர்ச்சா தலைவர் சுனில் யாதவை பாஜக களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் சார்பாக ரோமேஷ் சபர்வால் களமிறக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |