அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்கா ஒன்றில் சில முக்கிய காரணங்களால் 2 ஆமைக் குட்டிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்துள்ளது.
அமெரிக்காவில் மாஸெச்சூட்ஸின் என்னும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் வைத்து டைமண்ட் பேக் என்னும் இனத்தைச் சேர்ந்த இரு கடல் ஆமை குட்டிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த அதிசய ஆமை குட்டிகளுக்கு 2 தலைகளும் 6 கால்களும் உள்ளது.
இதனையடுத்து டைமண்ட் பேக் என்னும் இனத்தைச் சேர்ந்த இந்த 2 கடல் ஆமை குட்டிகளும் ஒன்றோடொன்று ஒட்டி பிறந்ததற்கு முக்கிய காரணமாக மரபணு ரீதியான மாற்றமும், சுற்றுச்சூழலுமே காரணம் என்று வனவிலங்கு பூங்காவின் நிர்வாகத்தினர்கள் தெரிவித்துள்ளார்கள்.