Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென்று வந்த பிரசவ வலி…” 108 ஆம்புலன்ஸில் இரட்டை குழந்தை”… தாயும் சேயும் நலம்..!!

ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

சத்தியமங்கலத்தில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவப்பா – அமுதா . அமுதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அதிகாலை அமுதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அமுதாவிற்கு அதிக வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவ உதவியாளராக இருந்த தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார்.

பிரசவத்தில் அமுதாவிற்கு முதலில்  பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மற்றொரு குழந்தை இருப்பதை பார்த்த தேவராஜ் சுமார் 22 நிமிடத்திற்குப் பின்னர் இரண்டாவது பிரசவம் பார்த்தார். அதில் அமுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அமுதா அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இரண்டு குழந்தைகளும் தாயும் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸில் முதல் பிரசவத்தில் இரண்டு  குழந்தைகள் பிறந்தது  இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |