Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி… ஆம்புலனிஸில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பு…!!

சுவர் இடிந்து விழுந்ததில் அறுவை சிகிச்சை செய்த தொழிலாளி வருமானமின்றி தவிப்பதால் ஆம்புலன்ஸில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளார்.

சேலத்தில் உள்ள பெரமனூர்  பகுதியை சேர்ந்த தம்பதியினர் தர்மதுரை- மங்கையர்கரசி.இத்தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தர்மதுரை கூலித் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த தர்மதுரை மீது  திடீரென்று  அவரது வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தர்ம துரையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கியதால் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து தர்ம துரைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததால் அவரால் எழுந்து அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய முன் வரவேண்டும் என்று கூறி தர்மதுரை அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸ்  மூலம் வந்து மனு அளித்தார்.குடும்ப செலவிற்கு வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் குழந்தைகளின் மருத்துவம் மற்றும் உணவிற்கு கூட வழியில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Categories

Tech |