பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் பட விழாக்கள் மற்றும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் போது சில சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளியான லால்சிங் தத்தா திரைப்படத்தைக் கூட ரசிகர்கள் இணையதளத்தில் கடுமையாக புறக்கணித்தனர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அமீர்கான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகர் அமீர்கான் மற்றும் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் ஒரு நிதி நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடித்துள்ளனர். இந்த விளம்பர படத்தில் அமீர்கான் பேசிய வசனம் தான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
அதாவது அமீர்கான் திருமணம் செய்து கொண்டு கியாரா அத்வானி உடன் வீட்டிற்கு வருகிறார். அப்போது மணமகன் இந்துமத நடைமுறைகளை பின்பற்றி வீட்டிற்குள் வர வேண்டும். அந்த சமயத்தில் நடிகர் அமீர் கான் திடீரென குறிக்கிட்டு எதற்காக காலம் காலமாக இருக்கும் முறையை பின்பற்ற வேண்டும். இதனால்தான் வங்கி நடைமுறைகள் ஒவ்வொன்றையும் நாங்கள் கேள்வி கேட்க வேண்டியிருக்கு என்று கூறியுள்ளார்.
இது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பாஜக மத்திய மந்திரி நரோட்டம் மிஸ்ரா கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அமீர்கான் இந்து மதத்தை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், இந்து மத பழக்கவழக்கங்களை இழிவு படுத்தும் விதமாகவும் விளம்பர படத்தில் நடித்துள்ளதாக என்னுடைய கவனத்திற்கு புகார் வந்துள்ளது. எனவே அமீர்கான் உட்பட விளம்பர படத்தில் நடித்தவர்கள் மற்றும் விளம்பர நிறுவனம் ஆகியோர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.