பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் எடுத்த திடீர் முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 56 ஆவது பிறந்த நாளைக் கடந்த 14ஆம் தேதி கொண்டாடினார். இவருக்குப் பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அமீர்கான் நேற்று தனது டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், “எனது பிறந்தநாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு மிகவும் நன்றி. இதனால் என் மனம் நிறைந்து விட்டது. இதுதான் என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கடைசி பதிவு. இப்போது நான் இதில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதற்கு முன் நாம் தொடர்பில் இருந்தது போலவே இனி இருப்போம்.
அமீர்கான் புரோடக்சன் என்கின்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளோம். அதில் நான் எதிர்காலத்தில் எடுக்கப்படும் படத்திற்கான அப்டேட்களை பதிவிட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் அமீர்கான் தனது டுவிட்டர் பக்கத்தை மூடி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.