Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென ஒரு சத்தம்…. வலியில் துடிதுடித்த பெண்…. குடும்பத்தினர் மகிழ்ச்சி….!!

இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பி பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இரவு நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி ஆம்புலன்ஸ் அவரின் வீட்டுக்கு விரைந்து சென்றுள்ளது.

இதனை அடுத்து சித்ராவை ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றுள்ளனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸில் வைத்து சித்ராவுக்கு பிரசவ வலி அதிகமான நிலையில் 12.45 மணிக்கு மருத்துவ உதவியாளர் சத்தியமூர்த்தி உதவியுடன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தை மற்றும் தாய் சுகாதார மருத்துவ மனையில் சேர்த்த நிலையில் இருவரும் நலமுடன் இருக்கின்றனர்.

Categories

Tech |