இத்தாலியில் இளம்பெண்ணை பெற்றோர்களே ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியிலிருக்கும் Novellara என்ற பகுதியில் 18 வயதுள்ள saman Abbas என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பெற்றோர்களான Nazia shaheen மற்றும் shabbar Abbas என்பவர் பாகிஸ்தானிலிருக்கும் உறவினரை திருமணம் செய்து கொள்ளுமாறு saman Abbas ஸை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அத்திருமணத்தை ஏற்க மறுத்த samman னை கடந்த ஏப்ரல் 30ம் தேதியிலிருந்து காணவில்லை. மேலும் இவர் காணாமல் போன சில தினங்கள் கழித்து samman னின் பெற்றோர்கள் பாகிஸ்தானிற்கு தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து samman னின் உறவினரான Danish Hasnain என்பவரும் தலைமறைவாகியுள்ளார். இதனால் இத்தாலி காவல்துறையினர் samman என்ற இளம்பெண் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது samman னினுடைய 16 வயதாகும் சகோதரர் காவல்துறையினருக்கு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அந்த வாக்கு மூலத்தில் மே 1ஆம் தேதி samman தன்னுடைய பெற்றோருடன் நடக்க சென்றதாகவும், அதன்பின் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து இத்தாலி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பிரான்சில் வைத்து மற்றொரு உறவினரையும் கைது செய்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தானிலிருக்கும் samman னின் பெற்றோர்கள் தன்னுடைய மகளை கொள்ளும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், அவர் தற்போது பெல்ஜியத்தில் தங்கியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் தாங்கள் ஜூன் 10ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து இத்தாலிக்கு திரும்பி வந்தவுடன் அனைத்து சந்தேகத்திற்கும் விடை கிடைத்து விடும் என்றும் கூறியுள்ளார்கள்.