Categories
மாநில செய்திகள்

8 வருடக் காதல்…. 1 மாதத்தில் முடிந்த பரிதாபம்… தொடரும் “ஆணவக் கொலைகள்”….!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகன்னா – சுவர்தம்மா தம்பதியின் மகன் ஆடம்ஸ்மித். இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள்  இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் ஆடம்ஸ்மித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர் குர்ஜலா  கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்துள்ளார்.

இதை அறியாத மகேஸ்வரியின் பெற்றோர் அவருக்கு திருமண  ஏற்பாடு செய்துள்ளனர். இதனால்  மகேஸ்வரி வங்கி தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு நவம்பர் 12ஆம் தேதி கிராமத்தை  விட்டு ஆடம்ஸ்மித்துடன்  வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஆடம்ஸ்மித்தின் நண்பருடைய வீட்டில் வசித்து வந்துள்ளனர் . இது குறித்து அறிந்த மகேஸ்வரியின் குடும்பத்தினர்  தொலைபேசி மூலம் ஆடம்ஸ்மித்திற்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கொலை மிரட்டலுக்கு பயந்து மகேஸ்வரியும்  ஆடம்ஸ்மித்தும் கர்னூலிலுள்ள எஸ்பிஐ சந்தித்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இந்த சூழலில் காவல்துறையினர் தலைமையில் மகேஸ்வரியின் குடும்பத்தினருக்கும் தம்பதியருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மகேஸ்வரியின் குடும்பத்தினர் மகேஸ்வரியை வீட்டிற்கு அழைத்துள்ளனர் . ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார். இந்த காதல் திருமணத்தை அவமானமாக கருதிய மகேஸ்வரியின் குடும்பத்தினர் இனி மகேஸ்வரி கிராமத்தின்  பக்கம் வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இதற்கு தம்பதியினர் இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அங்குள்ள காலனியில் இருவரும் அறை  எடுத்து தங்கியுள்ளனர். காவலர்கள் முன்னிலையில் மகேஸ்வரி குடும்பத்தினர் பிரச்சனை செய்ய மாட்டோம் என்று கூறியதால் இனி எந்த பிரச்சினையும் இல்லை என்ற எண்ணத்தில் தம்பதியர்  இருவரும் வாழ்ந்துள்ளனர் . ஆனால் சாதி வெறியர்கள் ஆடம்ஸ்மித்தை  கொடூரமாக அடித்து  கொலை செய்திருக்கின்றனர். இறந்த கணவனின் உடலை கட்டியணைத்து மகேஸ்வரி கண்ணீர் விடும் காட்சி அனைவரையும் உலுக்கியது. இச்சம்பவம்  குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |