தீராத வயிற்று வலியினால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் வசிப்பவர் சுப்புராஜ். தொழிலாளியான இவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார்.
இதனைதொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சுப்புராஜை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.