அந்த காலகட்டத்திலே ரஜினி, கமலை அசரவைக்கும் விதமாக நடிகர் ராமராஜன் 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத ஒரு நடிகர் ராமராஜன். இவர் முதலில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்தார். பின்னர் ரஜினி, கமலுக்கு சமமாக சினிமாவில் கால் பதித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் தான். இவரது கரகாட்டக்காரன் படம் வெளியான காலத்தில், திரையுலகின் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்களையும் அதிரவைத்த படமாகும்.
ஒரு வருடமாக தொடர்ந்து பல தியேட்டர்களில் ஓடி வசூல் மழை பொழிந்தது. இந்த நிலையில் நடிகர் ராமராஜன் திரைப்பயணத்தில் பீக்கில் இருக்கும்பொழுது ரூ 1 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளார். இது மட்டுமின்றி அவர் இப்படத்தை தொடர்ந்து பல சூப்பர், டூப்பர் செம ஹிட் சில்வர் ஜூப்ளி படங்கள் என தமிழ் சினிமாவிற்கு கொடுத்து அசத்தியுள்ளார்.