உலக நாடுகள் அனைத்தும் வருடந்தோறும் நவம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச ஆண்கள் தினத்தை பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியரான டாக்டர் ஜெரோம் என்பர் தான் முதன்முதலாக தோற்றுவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஜெரோம் என்பவர் வரலாற்று பேராசிரியராக பணி புரிந்துள்ளார். இதனையடுத்து இவருடைய தந்தை நவம்பர் 19ஆம் தேதி பிறந்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவருடைய தந்தை பிறந்த நவம்பர் 19ஆம் தேதியை நினைவு கூறும் வகையில் அந்த தேதியை அனைவரும் சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில் டாக்டர் ஜெரோம் வலியுறுத்தியதையடுத்து கரிபியன் தீவுகள் ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் தேதியை சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடி வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அனைத்து நாடுகளும் நவம்பர் 19 ஆம் தேதியை ஆண்களை போற்றும் விதமாக சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடி வருகிறது.