திருமஞ்சனத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழுர் பகுதியில் இருக்கும் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு பால், தேன், இளநீர் மஞ்சள்பொடி, சந்தனம் ஆகிய திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளனர். இதனையடுத்து வருடத்திற்கு ஆறு முறை மட்டும் நடராஜருக்கு நடைபெறும் இந்த திருமஞ்சன அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றியவாறு சாமி தரிசனம் செய்துள்ளனர்.