Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

தனிமையில் இருந்து விடுபட… இந்த 10 வசனம் போதும்…!!

அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள். (1 பேதுரு 5:7)

நீ பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே! நான் உன் தேவன். நான் உன்னைப் பலப்படுத்தி, உனக்குச் சகாய ம்பண்ணுவேன். என் நீதியின் வலக்கரத்தால், உன்னைத் தாங்குவேன். (ஏசாயா 41:10)

இதயம் நொருங்குன்டவர்களை குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். (சங்கீதம் 147: 3)

ஜனங்களே! எக்காலத்திலும் அவரை நம்புங்கள், அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை  ஊற்றி   விடுங்கள், தேவன் நமக்கு அடைக்கலமாய் இருக்கிறார். (சங்கீதம் 62 :8)

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருளசெய்வார். (சங்கீதம் 37:4)

என் தகப்பனும், என் தாயும், என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார். (சங்கீதம் 27 :10)

நீங்கள் பலங்கொண்டு திடமனதா இருங்கள், அவர்களுக்கு பயப்படவும், திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர், தாமே உன்னோடு கூட வருகிறார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. (உபாகமம் 31:6)

கர்த்தர் உங்களை, தமக்கு ஜனமாக்கி கொள்ள பிரியமான படியால், கர்த்தர் தம்முடைய நாமத்தினிமித்தம் தமது ஜனத்தை கைவிடமாட்டார். ( 1 சாமுவேல் 12 :22)

இதோ உலகத்தின் முடிவு பரியந்தம். சகல நாட்களிலும் நான் உங்களோடு கூட இருக்கிறேன். (மத்தேயு 28 :20)

எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி, அபயமிட்டேன், தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. (சங்கீதம் 18 :6)

Categories

Tech |