Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே முதன் முறையாக…. மூன்று தலைநகரங்கள்…. புதுமை படுத்தியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி ….

ஆந்திராவில்,  தனி தெலுங்கானா போராட்டங்களுக்கு பிறகு, மிக பெரிய போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் பார்த்து வருகிறது, ஆந்திர மாநிலம். மாநிலமாக இருந்தாலும்  சரி நாடாக இருந்தாலும் சரி, தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தும்  போராட்டங்களை, பொதுமக்கள் தலைநகரம் நடத்துவதுதான் வாடிக்கை. ஆனால் ஆந்திராவில்  எது தலைநகர் என்பதை நிர்ணயப்பதற்காக  போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள்  மட்டுமின்றி விவசாயிகளும்,  பெண்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் பேரணிகளை நடத்தி வருவதால்,  மாநிலமே பரபரத்து கொண்டிருக்கிறது. கடந்த 2014 ம் ஆண்டு ஆந்திராவிலிருந்து  தெலுங்கானா பிரிந்து  சென்ற பிறகு ஆந்திராவின் புதிய தலைநகராக  அமராவதி தேர்வு செய்யப்பட்டது.

அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அளவுக்கு அமராவதியை மாற்றப் போவதாக அறிவித்தார். நீதிமன்றம், சட்டசபை, அரசு அலுவலகங்கள்   அனைத்தும் அமராவதியில் தற்காலிக கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த மே மாதம்  ஆந்திராவுக்கு தேர்தல் வந்தது, இதில் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஊழல் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி அப்பணியை நிறுத்தியதோடு அதற்கு மாற்றாக புதிய திட்டத்தை கொண்டு வந்துவிட்டார்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் நீதிமன்றம், சட்டமன்றம்,  நிர்வாகம் ஆகிய மூன்று  மடங்கும் ஜனநாயகத்தின் வலுப்படுத்த,  இந்த மூன்று தூண்களும் சிறப்பாக செயல்படவும், அதிகார பரவலாக்கம் செய்வதாகவும், தூண்களுக்கு ஒரு தலைநகரம் என்கிரா ரீதியில் , மூன்று தலைநகரங்கள்  ஆந்திராவில் அமைய இருக்கிறது.

இதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.  இதன்படி ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற  தலைநகராக அமராவதியும் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினமும்,  நீதித்துறை தலைநகராக கர்ணோலும்  உருவாகி இருக்கிறது. அமராவதியில்  மாநில சட்டசபை அமைந்தாலும் தலைமைச் செயலகம் செயல்படும் விசாகப்பட்டினம் தான் உண்மையான தலைநகரம் என்று கருதப்படும்.

முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள்  ஆகியோருக்கான  அலுவலகங்கள் இங்கு அமையும் என்று  அரசின்  முக்கிய முடிவுகளும் ஆணைகளும் இங்கு இருந்தே பிறப்பிக்கப்படும் அறிவிக்கப்படும் . இதனாலேயே மூன்று தலைநகரங்களின்  முடிவுகளும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினர் அமராவதி தலைநகரம் அமைவதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றர் .

பாலியல் குற்றங்களை விசாரித்து 21 நாட்களுக்குள் தண்டனை அளிக்கும்  திசா  சட்ட திருத்தை கொண்டு வந்த ஜெகன்மோகன்ரெட்டி தலைநகர் விவகாரத்திலும்  புதுமையை காட்டியிருக்கிறார். கர்நாடக தலைநகர் பெங்களூர் மட்டுமல்லாமல் வட பகுதியிலும்  உள்ள பெலகாம்களிலும்   அம்மாநிலத்தில் சட்டசபை கட்டிடம் இருக்கிறது.

அங்கு குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் நடக்கும். இதேபோல மகாராஷ்டிராவிலும் மும்பை மட்டுமல்லாது நாகூரில் சட்டசபை இருக்கிறது. ஆனால் நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில்தான் 3 தலைநகரங்கள் இயங்குகிறது.

Categories

Tech |