டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களைகைப்பற்றக்கூடும் என்று கருத்து கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லி சட்டசபைக்கு வருகின்ற 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப்போகிறார்கள் என்பது 11 ஆம் தேதி தெரிந்து விடும்.
இந்தநிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி, களநிலவர ஆய்வு அமைப்பு Ipsos ஆகியவை இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி 10 முதல் 14 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி – 52 சதவீத வாக்குகள்,
பாஜக – 34 சதவீத வாக்குகள்,
காங்கிரஸ் – 4 சதவீத வாக்குகள்
ஆகவே இந்த முறையும் ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் கருத்துக்கணிப்பின்படியே முடிவு வெளியாகும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.