பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகின்றது. இதற்கான அரசியல் மத்திய , மாநில அளவிலான பிரசாரம் , தேர்தல் வாக்குறுதிகள் என மக்களை கவர்ந்து வருகின்றனர்.
மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடங்கும் முன்பு காங்கிரஸ் மற்றும் பாஜக தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் 3 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இன்று காலை டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் , துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். இதில் வேலைவாய்ப்பு, விவசாய பிரச்சினை, கல்வி, சுகாதாரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.