சிறுவர்கள் ஆனந்த குளியல் போடுவதாக நினைத்துக்கொண்டு ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் அமராவதி பிரதான பாசன கால்வாயானது உரிய பராமரிப்பு இல்லாமல் பாழாகி வருகின்றது. மேலும் கால்வாயில் துணி துவைப்பது, கழிவுநீர் கலப்பது போன்ற செயல்களால் நீரானது மாசுபட்டு வருகிறது. இந்நிலையில் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து ஆறு, கால்வாய்களுக்கு அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்வாயில் ஆனந்த குளியல் போடுவதாக நினைத்து கொண்டு கும்பல் கும்பலாக தாவிக் குதித்து ஆபத்தான நிலையில் குளித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அத்துமீறி வாய்க்காலில் குளிப்பவர்களை காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ளனர்.