பல நாடுகளிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்வதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக ஆரம்பித்ததை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஐ.எஸ் பயங்கரவாதிகள் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறார்கள்.
இவ்வாறான சூழலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் லிபியா, சிரியா உட்பட பல நாடுகளிலிருந்து ஆப்கனிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்கள் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் ரஷ்ய நாட்டிற்கு ஆப்கானிஸ்தானின் மூலம் பாதுகாப்பு ரீதியாக ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்களது நட்பு நாடான தஜிகிஸ்தான் தன் நாட்டுப் ராணுவ படைகளை ரஷ்யாவிற்கு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.