ஆப்கானிஸ்தானின் நாட்டின் முன்னாள் அமைச்சர் பீட்சா விநியோகம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அமைச்சர் Syed Ahmed Sadat ஆவார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரான Syed Ahmed Sadat வீடு வீடாக சென்று பீட்சா விநியோகம் செய்யும் டெலிவரி பாயாக வேலை செய்து வருகின்றார். இதனைத்தொடர்ந்து Syed Ahmed Sadat ஜேர்மனியில் உள்ள Leipzig நகரில் சீருடை அணிந்து கொண்டு சைக்கிள் ஒன்றில் பீட்சா டெலிவரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சர் Syed Ahmed Sadat ஜேர்மனியில் டெலிவரி பாயாக வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் என்ன? மேலும் இந்த காட்சியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் ஆப்கானிஸ்தானிலிருந்து பல அரசியல்வாதிகள் ஊழல் செய்து பணத்தை சுருட்டிக்கொண்டு நாட்டைவிட்டு ஓடிச் சென்ற நிலையில் நேர்மையாக டெலிவரி பாயாக பணிபுரியும் Syed Ahmed Sadatக்கு இணையத்தில் மக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.