Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தொடரும் வன்முறை…. முன்னாள் அதிகாரி தற்கொலை…. வேலையின்மையால் மக்கள் தவிப்பு….!!

ஆப்கானில் வேலையின்றி தவித்த முன்னாள் காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துள்ள சம்பவம் மக்களிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலீபான்களால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியில் 3 லட்சம் பாதுகாப்பு படை ஊழியர்களும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசு பணியாளர்களும் வேலையிழந்தனர். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் 7 உறுப்பினர்கள் சராசரியாக உள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு குணார் மாகாணத்தில் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முன்னாள் காவல்துறை அதிகாரியான சேகர் என்பவர் வேலையின்மையால் தற்கொலை செய்துள்ளார். மேலும் 3 மாதத்திற்கான ஊதியமும் முந்தைய நிறுவனத்தால் வழங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் இறந்த சேகரின் வருமானத்தை சார்ந்தே அவரது 2 மனைவிகள் மற்றும் 7 குழந்தைகள் உள்பட தாயார் மற்றும் உடன்பிறந்தோறும் இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் 10 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஆப்கானில் பல செய்தித்தாள் நிறுவனம் மற்றும் 150 ஊடகங்கள் நிதி இழப்பினால் பாதிக்கப்பட்டு அதன் வேலைப்பாடுகளை நிறுத்தி மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பத்திரிக்கையாளர்கள் சங்கம் தெறிவித்துள்ளது. தற்போது குறிப்பிட்ட ஊடகங்கள் மட்டுமே நிகழ்நிலை(online) வழியாக செய்திகள் வெளியிட்டு வருகின்றது.

Categories

Tech |