Categories
உலக செய்திகள்

மகளிர் நல அமைச்சகம்…. புதிய பெயர் சூட்டிய தலீபான்கள்…. பாதிக்கப்படும் ஆப்கான் பெண்கள்….!!

தலீபான்கள் பெண்கள் நல அமைச்சகத்தை கலைத்து அதற்கு பதிலாக பிரார்த்தனை, வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் என புதிய பெயர் வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். தற்போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி  ஒரு மாதம் கடந்து விட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த 7 ஆம் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை நிறுவியுள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதையும் கைப்பற்றிய பின்னர் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்போம் என வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்ன வாக்கை மீறி தற்போது பெண்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்த பின்னர் பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்பின் அவர்களுக்கு கல்வி உரிமை வழங்கப்படும். மேலும் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்றெல்லாம் கூறிய தலீபான்கள் தற்போது பெண்கள் நலத்துறை அமைச்சகத்தை கலைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வழிகாட்டுதல், நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல், பிரார்த்தனை என பெண்கள் நலத்துறை அமைச்சகத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இதற்கிடையில் இந்த அமைச்சகம் ஒன்றும் புதிது கிடையாது. அதாவது கடந்த 1996 முதல் 2001 வரையிலான தலீபான்களின் ஆட்சியிலேயே இந்த அமைச்சகம் செயல்பாட்டில் தான் இருந்து பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு செயல்பட்டு வந்துள்ளது. இதற்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகள் இந்த அமைச்சகத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் இந்த அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் பெண்களை அடித்து துன்புறுத்தப்படுவார்கள். அதன்பின்பு சாலைகளில் சுற்றித்திரியும் அலுவலர்கள் துணை இல்லாமல் தனியாக சென்றால் அவர்களையும் அடிப்பார்கள். இதற்கிடையில் சரியாக உடை அணியாத பெண்கள், கை மணிக்கட்டு மற்றும் கால் தெரிந்தாலும் அவர்களை அடிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இசை கேட்கும் பெண்கள் தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள். அதாவது இந்த அமைச்சகத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இதற்கு முன்பு தலீபான்கள் 2001 ல் ஆட்சியை விட்டு அகற்றிய போது இந்த அமைச்சகம் கலைக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தலீபான்களால் ஆப்கானிஸ்தானில் இந்த அமைச்சகம் புத்துணர்ச்சியுடன் செயல்பாட்டுக்கு திரும்பியுள்ளது.

இதற்கிடையில் தலீபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது ” ஆப்கானிஸ்தானில் ஆறாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் ஆண் மாணவர்கள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லலாம். அதன்பின்பு ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணவிகள் பள்ளிக்கு செல்லலாம்” என உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது இதற்கெல்லாம் அனுமதி வழங்கிய நிலையில் திடீரென அவற்றை தலீபான்கள் மறுத்துள்ளனர். அதாவது பல பகுதிகளில் பெண்கள் வேலைக்குச் செல்ல தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் பெண்கள் தாங்கள் மட்டுமே குடும்பத்திற்கு உழைக்கும் ஒரே நபர் என எடுத்துக் கூறிய போதிலும் அவர்கள் பணிபுரிவதற்க்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தலீபான்களின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தான் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

Categories

Tech |