விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமாக உரிமை இல்லாத மக்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலீபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளின் வசம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தலீபான் தீவிரவாதிகள் மற்றும் நேட்டோ அதிகாரிகள் அவர்கள் துப்பாக்கியினாலோ அல்லது நெரிசலில் சிக்கியோ பலியாகியிருக்கலாம் என தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அந்நாட்டிலிருந்து தப்பி செல்வதற்காக காபூலில் உள்ள Hamid Karzai விமான நிலையத்தில் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் ஏராளமான மக்கள் கூட்டமாக குவிந்துள்ளனர். அந்த மக்களிடம் தலீபான் அதிகாரிகள் கூறியதாவது “விமானத்தில் சட்டபூர்வமாக பயணிக்க உரிமை இல்லாத மக்கள் வீட்டிற்கு செல்லுங்கள். நாங்கள் யாரையும் விமான நிலையத்தில் துன்புறுத்த விரும்பவில்லை” என கூறியுள்ளனர்.