Categories
உலக செய்திகள்

நம்பிக்கை இல்லாத பெற்றோர்…. அமெரிக்க இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள்…. விளக்கமளித்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்….!!

நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் தலீபான் தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அமெரிக்க இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் கைவசம் சிக்கியுள்ளது. இந்நிலையில் காபூல் நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் கூட்டமாக குவிந்து தடுப்பு வேலியை தாண்டி உள்ளே இருக்கும் பிரித்தானியா பாதுகாப்பு படையினரிடம் தங்களது குழந்தைகளை ஒப்படைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தலீபான் தீவிரவாதிகளின் ஆட்சி அதிகாரத்தில் சிக்கி தங்கள் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணம் ஆப்கானிஸ்தான் மக்களிடம் தோன்றியது. அதனால் நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமாவது நாடு கடத்துவதற்காக அமெரிக்க பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாயுள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான வீடியோ குறித்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை பிரித்தானியாபாதுகாப்பு படையினரால் நாடு கடத்த முடியாது. இதனையடுத்து அந்த வீடியோவில் பாதுகாப்பு படையினர் குழந்தையை வாங்கி கொண்டதற்கு காரணம் அவர்களது குடும்பமும் விமான நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதேயாகும். மேலும் அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்திருக்கும் மக்கள் கூட்டத்தைத் தாண்டி உள்ளே வருவது மிகவும் கடினமானது. அதனால் நாங்கள் பிரச்சனையை வேறு வழியில் கையாள உள்ளோம். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |