Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகள்…. விசா இன்றி தங்க வைக்க முடிவு…. எதிர்ப்பு தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகள் என்ற பெயரில் தெற்காசிய நாடுகளில் விசா இன்றி நாட்டிற்குள் நுழைவதை நான் அனுமதிக்கவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு அகதிகளாக தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை மத்திய ஆசிய நாடுகளில் எவ்வித விசா விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் அகதிகளாக தங்க வைப்பது குறித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இருப்பினும் அதே சமயம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகளை ஆசிய நாடுகளில் தங்க வைப்பதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விசா விதிமுறையை பின்பற்றி வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின் கடந்த 23 ஆம் தேதி அவருடைய கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில் “ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை அகதிகளாக எவ்வித விசா விதிமுறைகளும் பின்பற்றாமல் மத்திய ஆசிய நாடுகளில் பல மேற்கத்திய நாடுகளை தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் அகதிகளை விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகள் என்ற பெயரில் தீவிரவாதிகளும் இருக்கலாம். அதனால் அவர்கள் விசா இல்லாமல்  ரஷ்யாவிற்குள் அனுமதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

Categories

Tech |