Categories
உலக செய்திகள்

ஆப்கானுக்கு உதவ தயார்…. பிரபல நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி…. வெளியான தகவல்கள்….!!

ஜேர்மன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஜேர்மனி நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் ஆவார். அவர் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் உதவ தாயாராக இருப்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியதற்கு அந்நாட்டு மக்களை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை மூலம் ஆப்கான் மக்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். இதன்தொடர்பாக தலீபான்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்த உள்ளோம். அதன்பின் தலீபான்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பொறுத்துதான் அடுத்தகட்ட முடிவுகளை எங்களால் எடுக்க முடியும்.

மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசாங்கம் தொடர்பான நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து எடுக்க நாங்கள் விரும்புகிறோம். சமீப காலத்தில் இருந்து ஆப்கானிஸ்தானில் நாங்கள் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோம். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானிலிருந்து எங்கள் குடிமக்கள் மற்றும் உள்ளூர் பணியாளர்களை வெளியேற்றும் போது அமெரிக்கா அளித்த ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம். இந்நிலையில் நாங்கள் அடுத்த கட்டத்தில் அமெரிக்காவுடன் இணைந்து ஒருங்கிணைந்த நாடாக செயல்பட விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |