ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் Zarifa Ghafari தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து ஜேர்மனிக்கு தனது குடும்பத்துடன் தப்பி சென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் 29 வயதுடைய Zarifa Ghafari ஆவார். இவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் இங்கு நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என உணர்ந்து கொண்டார். இதனையடுத்து மேயர் Zarifa Ghafari அவரது குடும்பத்துடன் தலீபான்களின் கண்ணில் சிக்காமல் ஜேர்மனிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்குள் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து மேயர் Zarifa Ghafari யை வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் மேயர் Zarifa Ghafari பயந்தது போலவே இரவோடு இரவாக அவரது வீட்டை தலீபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவரது வீட்டிற்க்கு பாதுகாப்பாக இருந்த காவலாளியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். மேலும் Zarifa Ghafari கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து தலீபான்களின் ஆதரவு பெற்ற Maidan Shar என்னும் பகுதியில் தனது 26 வயதில் மேயராக பொறுப்பேற்று தீவிரவாதிகளின் தொடர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுதான் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாக தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் மேயர் Zarifa Ghafari கடந்த 18ஆம் தேதி கார் ஒன்றில் அவரது குடும்பத்துடன் காபூல் விமான நிலையம் சென்றுள்ளார்கள். அதன்பின் தலீபான்களின் கண்களில் சிக்காமல் காருக்குள் ஒளிந்தபடியே பயணம் செய்துள்ளார். பிறகு துருக்கி தூதரக அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தையும் மீட்பு விமானத்தில் ஜேர்மனிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இவர் ஜேர்மனி நாட்டின் Düsseldorf நகரில் பத்திரமாக இருகிறார்.