ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதற்கு அந்நாட்டின் ராணுவமே முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் மூலம் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவே சென்றுள்ளது. ஆனால் அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்கான அங்கு செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்ட தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்த பின்புதான் அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளது. மேலும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ராணுவம் பல உதவிகளை ஆப்கானிஸ்தானிற்கு செய்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் போராடாமலேயே தலிபான் தீவிரவாதிகளுடன் சரணடைந்துள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல்வாதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையின்மையும், அவர்கள் நாட்டைவிட்டு ஓடி சென்றதுமே தீவிரவாதிகளின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். இதுக்குறித்து வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறுவதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததைவிட தலிபான் திவீரவாதிகள் மிக வேகமாக ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை மீட்கும் பணியானது நடைபெற்று வருகிறது. அவர்களை தாக்கினால் தலிபான் தீவிரவாதிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு எங்களது ஆதரவு தொடரும்” என கூறியுள்ளார்.