Categories
உலக செய்திகள்

ஆப்கானில் ஹக்கானிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க…. திட்டமிடும் பிரபல நாடு…. காபூலுக்கு சென்ற ஐஎஸ்ஐ தலைவர்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாக்க இருக்கும் புதிய ஆட்சியில் ஹக்கானி தீவிரவாத அமைப்பினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்து அதன் மூலம் பல விசயங்களை சாதித்து கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்கான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் புதிய ஆட்சியை உருவாக்குவது ஒரு சில காரணங்களால் சற்று தாமதமாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இந்த இக்கட்டான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாகிஸ்தான் துடிக்கிறது. அதற்காக பாகிஸ்தான் அந்நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரான ஹமீது ஃபயஸை காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் தலீபான்களின் அரசில் ஹக்கானிகளை இடம்பெற செய்து அதன் மூலம் தன்னுடைய நாட்டை பிரதிநிதிப்படுத்த திட்டமிட்டு வருகின்றது. ஆனால் தலீபான்கள் தன்னுடைய ஆட்சியில் ஹக்கானிகளை சேர்த்து கொள்ள விரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் தலீபான்களின் இரண்டாவது நிலையில் இருக்கும் கமாண்டர்களான முல்லா அப்துல் கனி பரதர் சகோதரர்கள், முல்லா யாக்கூப் மற்றும் ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கும் இடையில் பாலமாக இருந்து ஆலோசனை நடத்தி புதிய ஆட்சியில் அந்த அமைப்பைச் சேர்ந்த ஹக்கானிகளுக்கு இடம் பெற்று தருவதையே குறிக்கோளாக வைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த ஹக்கானி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஆப்கானிஸ்தானின் ராணுவ பலத்தை பெற்று தருவதற்காக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில் தலீபான்களுக்கு அதில் சிறிதும் உடன்பாடில்லை. இதன் காரணமாக அவர்களை நேரில் சந்தித்து பேசி இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அந்நாட்டின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவரான ஹமீது ஃபயஸை காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் தங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஹக்கானி தீவிரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் ஆட்சியில் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டால், அவர்கள் மூலம் பல விசயங்களை மறைமுகமாக சாதித்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் தலீபான்களுக்கு தலைமையகம் இருந்துள்ளது. அப்போது அவர்கள்  ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்கள்.

அதன்பின் பாகிஸ்தான் தலீபான்களுக்கு மறைமுகமாக உதவியதாக அப்போதைய ஆப்கன் மற்றும் அமெரிக்க அரசும் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் வழக்கம் போல் அந்த குற்றசாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அடுத்தவாரம் அமைக்கப்படும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே சில ஆதாரங்களின் அடிப்படையில்  தீவிரவாத அமைப்புகளின் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு மறைமுகமாக செயல்பட்டதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் கோர்சான், அல் கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டுமென அவர்கள் உத்தரவிட்டதாகவும் தகவல்களில்  தெரியவந்துள்ளது.

Categories

Tech |