ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமைத்த புதிய ஆட்சியில் தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மதிக்க தவறிவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 7ஆம் தேதி அவர்களின் புதிய அரசாங்கத்தை அறிவித்துள்ளனர். இதனையடுத்து தலீபான்களின் அமைச்சரவையில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார தடைகளின் கீழ் அல்லது தீவிரவாத குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவால் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் தலீபான் அல்லாதவர்கள் யாருக்கும் இடமளிக்கப்படவில்லை.
இதுக்குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது “நாங்கள் தலீபான்களின் புதிய அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயர்களை பகுப்பாய்வு செய்து பார்த்ததில் எதிர்பார்த்தது போலவே ஆப்கானிஸ்தானின் இன மற்றும் மத வேறுபாட்டின் அடிப்படையில் உள்ளடக்கிய அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளும் தலீபான்களுடன் தங்கள் ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்ள விரும்புகின்றது.
இதனையடுத்து அவ்வாறு தங்களின் ஈடுபாட்டை அதிகரித்துக் கொள்வதற்காக பல குழுக்களை உள்ளடக்கிய அல்லது பிரதிநிதித்துவ புதிய ஆட்சியை உருவாக்குவது உட்பட ஐந்து நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் வகுத்துள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் விளைவாக தலீபான்களின் புதிய அரசாங்கத்தில் பல குழுக்களை உள்ளடக்கிய அல்லது பிரதிநிதித்துவப் புதிய ஆட்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என கூறியுள்ளார்.