பிரான்ஸ் மீட்பு விமானம் ஓன்று 21 இந்தியர்களை பத்திரமாக நாடு கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தின் முன் மக்கள் பலர் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் 21 இந்தியர்கள் ஏற்றி செல்லப்பட்டு பத்திரமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் Emmanuel Lenain தெரிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ் மீட்பு விமானத்தில் ஏற்றி வரப்பட்ட 21 இந்தியர்களும் காபூல் விமான நிலையத்தில் பிரான்ஸ் தூதரகத்தை பாதுகாக்கும் பணியை மேற்கொண்ட கூர்க்கா படையை சேர்ந்த வீரர்கள் ஆவார்.