அமெரிக்க படைகள் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் அந்த நாட்டை சேர்ந்த மக்கள் தலிப்பான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து விமானத்தில் ஏற ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்கப் படைகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.