Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்…. துப்பாக்கி சூடு நடத்திய தலீபான்கள்…. 2 பேர் பலியான சோகம்….!!

பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை நோக்கி தலீபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து  ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை உருவாக்குவதற்கான செயல்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது தலீபான்களின் கேபினட் சபை  அவர்களின் புதிய ஆட்சிக்கான தலைவர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்பின் தலீபான்களின் புதிய ஆட்சியின் தலைவராக முகமது ஹசன் முகுந்த்தும் துணைத் தலைவராக அப்துல் கனி ஃபராதரும் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானியும் பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப்பும் நிதி அமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் குறிப்பாக சிராஜூதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹக்கானி நெட்வொர்க் தலீபான் அமைப்பின் கிளை அமைப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு தலைவராக ஆனஸ் ஹக்கானி செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆனஸ் ஹக்கானியின் தலைமையிலான அமைப்பு பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை அளித்து வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் ஈடுப்பட்டுள்ளது. அதனால் ஆப்கானிஸ்தான்  மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தை மக்கள் ஹீரட் மாகாணத்தில் நடத்தியுள்ளனர். அப்போது போராட்டம் நடத்திய மக்களை நோக்கி தலீபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தலீபான்களின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |